நான் நன்றியோடு துதிப்பேன் {Naan nandriyodu thuthippen
நான் நன்றியோடு துதிப்பேன்
என்வாழ் நாளெல்லாம் துதிப்பேன்
உம் பாதம் பணிந்து துதிப்பேன்
உம்மை மகிழ்ந்து மகிழ்ந்து துதிப்பேன்
1.செய்த நன்மை கோடி
அதை சொல்லி முடியாதையா
னினைத்து நினைத்து நெஞ்சம்
நன்றி சொல்லி மகிழுதையா
2.அதிகாலை தோறும் என்னை
அப்பா தட்டி எழுப்பினீரே
தினம் புதிய கிருபை தந்து
உம்மில் மகிழச் செய்தீரையா
3.தாயின் வயிற்றில் என்னை
உருவாக்கும் முன்னே அறிந்தீர்
பெயரைச் சொல்லி அழைத்தீர்
உம் பிள்ளையாக மாற்றினீர்
4.புது பாடல் எனக்கு தந்தீர்
உம் நாமம் பாட பாட
அபிஷேகம் எனக்கு தந்தீர்
சாத்தானை ஜெயித்து வாழ
Post a Comment