Nandri niraintha idhayathodu

நன்றி நிறைந்த இதயத்தோடு (Nandri niraintha idhayathodu 

நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

1.நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ - என்

என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர்

2.என் போக்கிலும் வரத்தினிலும்
என் இயேசுவே பாதுகாப்பு
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
அவர் கிருபை தாங்குமே - என்

3.என் கரம் பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் - என்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes