Nandri pali peedam kattuvom

நன்றி பலி பீடம் கட்டுவோம் {Nandri pali peedam kattuvom


நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மைகள் ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன்
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்

2.சிறந்த முறையிலே குரல் எழுப்பும்
சிலுவை இரத்தம் நீர் சிந்தினிரே
இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
எதிரி நுழையாமல் காத்துக் கொண்டீர்

3.இருளின் அதிகாரம் அகற்றி விட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்து விட்டீர்
உமக்குச் சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்

4. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

5.இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
வாழத் தேவையான வசதி தந்தீர்
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
கடனே இல்லாமல் வாழ வைத்தீர்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes