osannah paaduvom

ஓசான்னா பாடுவோம் {osannah paaduvom

ஓசான்னா பாடுவோம்
இயேசுவின் தாசரே
உன்னதத்திலே தாவீது
மைந்தனுக்கு  ஓசான்னா

1.முன்னும் பின்னும் சாலோம் நகர்
சின்ன பாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும்
அன்பாய்த் துதி பாடுவோம்

2.சின்ன மறி மீதில் ஏறி
அன்பர் பவனி போனார்
இன்றும் என் அகத்தில் அவர்
என்றும் அரசளுவார்

3.பாவமதைப் போக்கவும்
இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ல இயேசைய்யா
பவனியாகப் போகிறார்

4.பாலர்களின் கீதம் கேட்டுப் 
பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடு பாடித்
தாளை முத்தி செய்வோம்

5.குருத்தோலை ஞாயிற்றில்
நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்று நாமும்
திரியேகரைப் போற்றுவோம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes