பிதா குமாரன் பரிசுத்த {Pithaa kumaaran parisutha
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம் [2]
1. பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்
2. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்
3. வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கின்று
ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்
4.அனல் போல் சோதனை வந்தாலும்
அக்கினி ஊடாய் நடந்தாலும்
சோதனை நம்மை சூழ்ந்தாலும்
ஜெயம் அளிப்பவரை ஸ்தோத்தரிப்போம்
5.வானவர் விரைவில் வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைப்போமே
வானவருடன் சேர்ந்திடும் நாள்
விரைவில் நெருங்கிட ஸ்தோத்தரிப்போம்
Post a Comment