Potruvome potruvome

போற்றுவோமே போற்றுவோமே {Potruvome potruvome

போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே

1. துங்கன் யேசுவே தூயா உமக்கே
துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி
எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி
மங்கிடாமலே தங்கிட வேணும்

2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
அணைத்து எடுத்தோனே
ஆழிதன்னிலெம் பாவம் எறிந்த
அன்னை உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன்
மன்னவனையே மனதினிலே

3. பாவம் போக்கியே கோபம் மாற்றியே
ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த
தூய வேந்தனே
தூயா நேயா காய மாற்றியே
கருணாநிதியே பரிகாரியே

4. பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே
தாவி வந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட
அருள் நிறைந்தோனே
தரிசனம் தந்த தேவனே
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க

5. பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே 
கானம் பாடியே துதித்திடுவேன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes