சர்வ அங்க தகனபலி (Sarva anga thganapali
சர்வ அங்க தகனபலி -எங்கள்
சர்வ வல்ல தேவனுக்கு
உதடுகளின் ஸ்தோத்திர பலி - எங்கள்
உன்னத நல் ராஜனுக்கு
ஸ்தோத்திர பலி - 3
நான் செலுத்தும் பலி - 2
1.அசைவாட்டும் ஜீவபலி - எங்கள்
அசைவாடும் தேவனுக்கு
பிசைந்த மாவின் ஓர் மெல்லிய பலி - எங்கள் மெல்லிய நல் ராஜனுக்கே
ஸ்தோத்திர பலி - 3
2.சமாதான ஜீவபலி - எங்கள்
சமாதான தேவனுக்கே
இடித்து பிழிந்த திராட்சை ரசத்தின் பலி - என்னை
நடத்திடும் தேவனுக்கே
ஸ்தோத்திர பலி - 3
3.என் கைகளின் காணிக்கை பலி -என்னை
வாழ வைக்கும் தேவனுக்கு
என் ஆவி ஆத்ம சரீர பலி- என்னை ஆளுகின்ற தேவனுக்கே
ஸ்தோத்திர பலி - 3
நான் செலுத்தும் பலி - 2
Post a Comment