Sthothiram yesu naathaa

ஸ்தோத்திரம் இயேசு நாதா {Sthothiram yesu naathaa

ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசு நாதா 
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்

1.வான தூதர் சேனைகள் மனோகர 
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றி பாடித் துதிக்கப் பெரும்
மன்னவனே உமக்கு

2.நின் உதிரமதினால் திறந்த நின்
ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்நதம்

3.இத்தனை மகத்துவமுள்ள பதவி இப்
புழுக்களாம் எங்களுக்கு
எத்தனை மா தயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்

4.இன்றைத் தினமதிலும் ஒருமித்துக்
கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக
உமக்கென்றும் ஸ்தோத்திரம் 
ஸ்தோத்திரமே

5.நீரல்லால் எங்களுக்குப் பரலோகில்
யாருண்டு ஜீவ நாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்ற மில்லை பரனே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes