Thuthi paaduvaai nenjame

துதி பாடுவாய் நெஞ்சமே {Thuthi paaduvaai nenjame

துதி பாடுவாய் நெஞ்சமே 
அவர் துதி சொல்லி வரவே
தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே
முன் அறிந்தார் முன் குறித்தார்
நம்மை அழைத்தார்
மகிமைப் படுத்தினார் இன்னும் 
மகிமைப் படுத்துவார்

1.பூமியின் மன்னை மரக்காலால் 
அளந்தவரும் அவரே
வானங்களைத் திரைப்போலாய்
விரித்தவரும் அவரே
நட்சத்திரங்களை பெயர் சொல்லி
அழைத்தவரும் அவரே
உன்னையும் என்னையும் 
உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே

2.வானம் திரந்து மன்னாவால்
போஷிப்பவரும் அவரே
செங்கடல்தனை இரண்டாக
பிளந்தவரும் அவரே
மோசேயின் கைக்கோலால்
அற்புதங்கள் செய்தவரே
உலகம் முடியும்வரை துணையாய்
நம்முடன் இருப்பவரே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes