துதிப்போம் நாம் துதிப்போமே (Thuthippom naam thuthippome
துதிப்போம் நாம் துதிப்போமே
தேவாதி தேவனைத் துதிப்போமே
மகிழ்வோம் நாம் மகிழ்வோமே
மன்னவர் இயேசுவில் மகிழ்வோமே
1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனமே
இயேசுவை நம்பினால் பாக்கியமே
பரம பிதாவின் பிள்ளை நாமே
பரிசுத்தர் இயேசுவில் மகிழ்வோமே
2. தாவீது தேவனைத் துதித்தாரே
மரியாளும் தேவனையே துதித்தாரே
துதிப்பதற்கே நம்மை அழைத்தாரே
துன்பத்திலும் இன்பத்திலும் துதிப்போமே
3. துதர்களும் தேவனை துதிக்கிறார்கள்
சீடர்களும் தேவனையே துதித்தார்கள்
அபிஷேகம் பெற்றவர் துதிப்பார்கள்
ஆண்டவர் இயேசுவை துதிப்போமே
Post a Comment