Thuthisei maname

துதிசெய் மனமே { Thuthisei maname


துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின 
உன் தேவனை 
இன்றும் என்றும் நன்றி
நிறைந்த மனதோடே

1.முன்கால மெல்லாம் உன்னைத் 
தம் கரமதில் ஏந்த்தி வேண்டிய நன்மைகள்
யாவும் உனக்களித்தாரே - துதி

2.ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்த போது
ஏகபரன் உன் காவலனாய் இருந்தாரே

3.சோதனை பலவாய் 
மேகம்போல் உன்னை சூழ்ந்தாலும் 
சேதமுறாமல் முற்றிலும் 
காக்க வல்லோரை

4.தாய் தந்தை தானும் ஏகமாய்
உனை மறந்தாலும் 
தூயரின் கையில் உன் சாயல்
உள்ளதை நினைந்தே

5.சந்ததம் உன்னை 
நடத்திடும் சத்திய தேவன் 
சொந்தம் பாராட்டி
உன்னுடன் இருப்பதினாலே - துதி

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes