Um peedathai sutri sutri

உம் பீடத்தை சுற்றி சுற்றி-Um peedathai sutri sutri  


உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்

என் தெய்வமே இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா

1. உரத்த குரலில் நன்றிப் பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்

2. உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்

3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம் உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes