Um siththam seivathil thaan

உம் சித்தம் செய்வதில்தான்-Um siththam seivathil thaan


உம் சித்தம் செய்வதில்தான் - நான்
மகிழ்ச்சி அடைகிறேன்
உம் வசனம் இதயத்திலே
தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன்
அல்லேலூயா (2) மகிமை உமக்குத்தான்

1.துதிக்கும் புதிய பாடல்
நாவில் எழ செய்தீரே - உம்மை
பலரும் இதைப் பார்த்துப் பார்த்து
நம்புவார்கள் உம்மையே

2.காத்திருந்தேன் பொறுமையுடன்
கேட்டீரே என் வேண்டுதலை
குழியிலிருந்து தூக்கி
கன்மலையில் நிறுத்தினீரே

3.எத்தனை எத்தனை நன்மைகளோ
என் வாழ்வில் நீர் செய்தீர்
எண்ண இயலாதையா
விவரிக்க முடியாதையா

4.மாபெரும் சபை நடுவில்
உம் புகழை நான் அறிவிப்பேன்
மௌனமாய் இருக்க மாட்டேன்
மனக்கண்கள் திறந்தீரே!

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes