உம் வார்த்தைகள் மேலானது ( Um vaarthaigal melanathu
உம் வார்த்தைகள் மேலானது
உம் வல்லமை மேலானது
உம் திரு இரத்தம் மேலானது
உம் சமூகமே மேலானது
1.உம்மில் மகிழ்ந்திடுவேன்
உம்மில் களிகூறுவேன்
உம் மார்பினில் சாய்ந்து கொண்டு
உம்மில் சுகித்திருப்பேன்
2.என்ன ஆனந்தம்
என்ன பேரின்பம்
இயேசு நீர் ஒருவராலே
என்றுமே எனக்கு இன்பம்
3.சேனையின் கர்த்தராலே
ஜெயமாய் முன்னேறிடுவேன்
வெற்றியின் ஆனந்தத்தால்
நடனம் ஆடிடுவேன்
Post a Comment