உம்மை நான் போற்றுகின்றேன்-Ummai naan potrukindren
உம்மை நான் போற்றுகின்றேன் இறைவா
உம்மை நான் புகழ்கின்றேன் இறைவா
போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வணங்குகின்றேன்
1.என்னைக் கைதூக்கி விட்டீர்
எதிரியின் மேல் வெற்றி தந்தீர்
உதவி தேடி வந்தேன்
உடல் சுகம் தந்தீரைய்யா - ஆ ஆ
புகழ்ந்து பாடுவேன்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
2.மாலைநேரம் அழுகையென்றால்,
காலைநேரம் ஆனந்தமே
நொடிப்பொழுது உந்தன் கோபம்,
தயவோ வாழ்நாளெல்லாம்,
3.சாக்கு துணி களைந்து விட்டீர்
மகிழ்ச்சி உடை உடுத்தி விட்டீர்
புலம்பலை நீக்கிவிட்டீர்
புதுப்பாடல் நாவில் வைத்தீர்
4.என் உள்ளம் புகழ்ந்து பாடும்
இனி மௌனமாய் இருப்பதில்லை
கர்த்தாவே என் தெய்வமே
கரம்பிடித்த மேய் தீபமே
Post a Comment