Vaanam poomi padaitha yesuve

வானம் பூமி படைத்த இயேசுவே-Vaanam poomi padaitha yesuve


வானம் பூமி படைத்த இயேசுவே - உம்மை
வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும்
ஆராதிக்கின்றோம்

1.வல்லவரும் நல்லவரும் நீரே - உம்மை
வணங்கி நாங்கள்
ஆராதிக்கின்றோம் - 2

2.பரிசுத்தரும் பெரியவரும் நீரே உம்மை
பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்

3.உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரே
உம்மை உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்

4.ஆறுதலும் தேறுதலும் நீரே - உண்மை
அன்பில் நாங்கள் ஆராதிக்கின்றோம்

5.மகிமையும் மாட்சிமையும் நீரே - உம்மைப்
மகிழ்ந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்

6.இனிமையும் இன்பமும் நீரே - உம்மை
என்றும் நாங்கள் ஆராதிக்கின்றோம்

7.கிருபையும் சத்தியமும் நீரே
உம்மை கரம் உயர்த்தி ஆராதிக்கின்றோம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes