ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் {Aanathamaaga anbarai paaduvaen
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென் ஆத்துமாவிற்கே
ஆசிகளருளும் அனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறு எங்குமில்லையே
1.தந்தை தாயுமுன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார் -இயேசு
2.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்
3.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின் மேல் ஜெயமடைந்திடுவோம்
Post a Comment