Theva thevanai thuthiththiduvom

தேவ தேவனைத் துதித்திடுவோம்{Theva thevanai thuthiththiduvom

தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் கர்த்தர் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை 
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயாபரிசுத்தருக்கே
அல்லேலூயாஇராஜனுக்கே

1.எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மனி போலக் காத்தருளும்
கிருபையால் நிதம் வழிநடத்தும்  -  அல்

2.சபையில் உம்மை அழைத்திடுவோம் 
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம்

3.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நனமி கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்  -  அல்

4.வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes