ஆராதிக்கின்றேன்-Aarathikkindren
ஆராதிக்கின்றேன்கும்பிட்டாரதிக்கின்றேன்
ஆராதனையில் புது கானம் பாடியே
மாஉன்னதராம்
இரட்சகர் நாமம் வாழ்த்திப்பாடி
உம்மலரடியில் தாழ்ந்து
வீழ்ந்து வணங்குவேன்
ஆத்ம நாதனே உம்மில் சேர்வேனே
என் மனதில் நீர் என்றும் தங்குமே
1.இயேசு நாதா ஒரு சிசுவாய்
என்னை உந்தன் முன்பில் மாற்றிடுமே
எந்தன் பாவம் யாவும் போக்கினதால்
துக்க பாரம் யாவும் நீக்கினதால்
ஆத்மாவை நீர் ஆட்கொண்டதால்
ஆனந்த கண்ணீரில் பாடுகின்றேன்
2.ஸ்நேக நாதா ஜீவ பலியாய்
என்றும் உம்மில் நான் ஜீவித்திட
எனதுள்ளம் யாவும் சமர்ப்பிக்கின்றேன்
மகனாக என்னையும் மாற்றிடுமே
ஆதி நாதனே அதிசயமே
நீர் எந்தன் மகிமை மெசியாவே
Post a Comment