Aaravaaram aarppaattam

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் {Aaravaaram aarppaattam

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா சந்நிதியில்
நாளெல்லாம் கொண்டாட்டம்
நல்லவர் முன்னிலையில்
நன்றி பாடல் தினமும் பாடுவோம்
நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம்

1.கல்வாரி சிலுவையிலே கர்த்தர் அவர்
இயேசு வெற்றிச் சிறந்தார்
கண்ணீரை மாற்றி நம்மை
காலமெல்லாம் மகிழச் செய்தார்  - நன்றி

2.கிறிஸ்துவை நம்பினதால்
பிதாவுக்குப் பிள்ளையானோம்
அப்பான்னு கூப்பிடப் பண்ணும் 
ஆவியாலே நிரப்பப்பட்டோம்

3.உயிர்த்த கிறிஸ்து நம்ம 
உள்ளத்திலே வந்துவிட்டார்
சாவுக்கேதுவான நம்ம 
சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார்

4.ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
ஆசாரிய கூட்டம் நாம்
வெளிச்சமாய் மாற்றியவர்
புகழ்ச்சிதனை பாடிடுவோம் 

5.துயரம் நீக்கிவிட்டார்
கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்
ஒடுங்கின ஆவி நீக்கி
துதி என்னும் உடையைத் தந்தார்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes