ஆதி பிதா குமாரன் ஆவி (Aathi pitha kumaran aavi
ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்குஅனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்
நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன்
நிறைந்த சத்திய ஞானமனோகர
உறைந்த நித்திய வேதகுணாகர
நீடுவாரிதிரை சூழ மேதினியை
மூட பாவ இருள் ஓடவே அருள் செய்
1.எங்கணும் நிறைந்த நாதர்
பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறை பிரபோதர்,
கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பங்கில்லான் தாபம் இல்லான்
பகர்அடி முடிவில்லான்
பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய் சுயம்பு விவேகன்
அன்பிரக்க தயாள பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு
மீட்பு பரிபாலனைத்தையும் பண்பாய் நடத்தி அருள்
2.நீதியின் செங்கோல் கைக்கொண்டு நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து
தீதறு நரகில் தள்ளுண்டு
மடிவோமென்று
தேவ திருவுளம் உணர்ந்து
பாதகர்க் குயிர் தந்த பாலன் இயேசுவைக் கொண்டு
பரண் எங்கள் மிசை தயை
வைத்தனர் இது நன்று
பகர்ந்த தன்னடியார்க்குறு சஞ்சலம் இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான
சேதமுற சூரியன் முன் இருள்
போலவே சிதறும்
Post a Comment