Thirimuthal kirubasanane

திரிமுதல் கிருபாசனனே (Thirimuthal kirubasanane


திரிமுதல் கிருபாசனனே சரணம்!
ஜெகதல ரட்சக தேவா சரணம்!
தினம் அனுதினம் சரணம் கடாட்சி!
தினம் அனுதினம் சரணம்! சர்வேசா

2.நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!
நம்பினேன் இது தருணம்
தருணம் நம்பினேன் தினம் சரணம் !

3 .அருவுருவே அருளரசே சரணம்!
அன்றுமின்று மென்றும் உள்ளாய் சரணம் !
அதிகுணனே: தருணம் கிரணமொளிர்
அருள் வடிவே, சரணம் !

4.உலகிட மேவிய உனதா சரணம்!
ஓர் கிருபாசன ஒளியே சரணம்!
ஒளி அருள்வாய், தருணம்
மனுவோர்க்கு உத்தமனே, சரணம் !

5.நித்திய தோத்திர நிமலா சரணம்!
நிதி இசரேலரின் அதிபதி சரணம்!
நீதா இது தருணம்: கிருபைக்கொரு
ஆதாரா, சரணம் !

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes