Seermigu vaanpuvi theva thothram

சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் (Seermigu vaanpuvi theva thothram

சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம்
சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய் தோத்ரம்
ஏர்குணனே தோத்ரம் அடியார்க்கு
இரங்கிடுவாய் தோத்ரம் மா நேசா

1.நேர்மிகு அருள்திரு அன்பா தோத்ரம்
நித்தமும் உமக்கடியார்களின் தோத்ரம்
ஆர் மணனே தோத்ரம் உனது அன்பினுக்கே தோத்ரம்
மா நேசா

2.ஜீவன் சுகம் பெலன் யாவுக்கும் தோத்ரம்
தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்
ஆவலுடன் தோத்ரம் உனது அன்பினுக்கே
தோத்ரம் மா நேசா

3.ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்
அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்
சாற்றுகிறோம் தோத்ரம்,
உனது தகுமன்புக்கே தோத்ரம்
மா நேசா

4.மாறா பூரண நேசா தோத்ரம்
மகிழொடு ஜெபமொழி மாலையில் தோத்ரம்
தாராய் துணை தோத்ரம்
இந்த தருணமே கொடு, தோத்ரம் மா நேசா

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes