Aayiram sthoththiramae

ஆயிரம் ஸ்தோத்திரமே {Aayiram sthoththiramae

ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத்தாக்கிலே அவர் லீலி
சாரோனில் ஓர் ரோஜா

1.வாலிப நாட்களிலே
என்னைப் படைத்தவரை நினைத்தேன் 
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

2.உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

3.சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் நோவுகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

4.பலவித சோதனையை
சந்தோசமாய் நினைப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி
இயேசுவுக்கு கீழ்ப்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

5.இயேசுவின் நாமத்திலே 
ஜெயங்கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம்
இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes