Adaikkalame umathadimai naane

அடைக்கலமே உமதடிமை நானே {Adaikkalame umathadimai naane

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நான் நினைப்பேனே

1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
மாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ 

2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே  – ஆ 

3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து 
ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுமே

4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே 

5. பாவங்களை பாராதென்னைப் 
பற்றிக்கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை 
திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே 

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes