துதி உமக்கே இயேசு நாதா {Thuthi umakke yesu naathaa
துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உமையே
நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
எண்ணியே துதித்திடுவேன்
1.ஆதி அந்தமில்லா அனாதிதேவனே
அடைக்கலமானீர் எமக்கு நீரே
மாறா விசுவாசத்தை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் - துதி
2.கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை
காருண்யத்தாலே காத்தீரே
வல்ல தேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம் - துதி
3.தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீரே
தந்தைபோல் எம்மை சுமந்தீரே
ஜீவனைத் தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம் - துதி
4.உன்னதா உந்தன் மகிமையைக் காண
சீயோனை எமக்கு காட்டினீரே
இயேசுவே உந்தன் வருகையின் நாளை
எண்ணியே துதித்திடுவோம் - துதி
Post a Comment