அல்லேலூயா நமது ஆண்டவரை (Alleluyah namathu aandavarai
அல்லேலூயா நமது ஆண்டவரை
அவர் ஆலயத்தில் தொழுவோம்
அவருடையது கிரியையான
ஆகாய விரிவைப் பார்த்து
1.மாட்சியான வல்ல கர
மகத்துவத்துக்காகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும்
வீணையோடும் துதிப்போம்
மாசில்லா சுரமண்டலத்தோடும்
தம்புருவோடும் நடனத்தோடும்
மா பெரிய யாழோடும்
இன்னிசை தீங்குழலோடும்
துதிப்போம்
2.அல்லேலூயா ஓசையுள்ள
கைத்தாளங்களைக் கொண்டு துதிப்போம்
அவருடையப் புதுப்பாட்டை
பண்ணிசைத்து துதிப்போம்
அதிசய படைப்புகள் அனைத்தோடும்
உயிரினைப் பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி
துதித்து உயர்ந்திடுவோம்
Post a Comment