அன்பே பிரதானம் (Anbe pirathanam
அன்பே பிரதானம்- சகோதரஅன்பே பிரதானம்
1.பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விசுவாசம் இவைகளிலெல்லாம்
2.பல பல பாஷை படித்தறிந்தாலும்
கலகலவென்னும் கைமணியாமே
3.என்பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பில்லையானால் அதிற்பயனில்லை
4.துணிவிடனுடலைச் சுடக் கொடுத்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை
5.சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள
6.புகளிருமாப்பு பொழிவு பொறாமை
பகையை நியாயப் பாவமும் செய்யா
7.சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது
8.சகலமும் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைப்பட வென்றும் மேன்மை பெற்றோங்கும்
Post a Comment