Appa veetil eppothum santhosame

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே {Appa veetil eppothum santhosame 


அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம

ஆடுவோம் கொண்டாடுவோம்
பாடுவோம் நடனமாடுவோம்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே - அப்பா

1. காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்

2. பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கிவிட்டார்

3. பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்

4. ஆவியென்னும் ஆடை தந்தார்
அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார்

5. வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்

6. அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes