Sarva vallavar en sonthamanar

சர்வ வல்லவர் என் சொந்தமானார் {Sarva vallavar en sonthamanar


சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சாவை வென்றவர் என் ஜீவனானார்
ஆ.. ஆ.. இது அதிசயம் தானே
ஓ..ஓ ..ஓ  இது உண்மைதானே

1. கண்டு கொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசு தான் என் இரட்சகர்- 2
இயேசு தான் என் ராஜா - 2 - சர்வ

2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் - சர்வ

3.  பரலோகத்தில் எனதுபெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வதுதான் - சர்வ

4.  ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கிறார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்- சர்வ

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes