Arputha yesurajane

அற்புத இயேசுராஜனே (Arputha yesurajane

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ... ஓ...ஓ... – 2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம்

1. கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள்
என் இராஜா என் ரோஜா
என் தெய்வம் என் இயேசு

2. நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்
நான் போற்றிப் பாடும் சர்வ வல்ல தேவன்
என் அன்பர் என் இன்பர்
என் நண்பர் என் இயேசு

3.ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்பவர்
இருளில் இருந்து புதையலைக் கொண்டு வருபவர்
நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்
எனக்கு உரியவர் என் இயேசு

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes