அதிசயங்கள் செய்கிறவர் (Athisayangal seigiravar
அதிசயங்கள் செய்கிறவர் நம்அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்
1.(எகிப்து) தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம்
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய்
மாற்றினார் அதிசயம்
2.செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்
புயல் காற்றைத் தம் ஆணையாலே
அதட்டினார் அதிசயம்
3.குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்
ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்
4.பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்
ஏழை என் மீதும் நேசக்கரம்
நீட்டினார் அதிசயம்
Post a Comment