எல்லையில்லா உந்தன் அன்பால் (Ellaiyilla unthan anbaal
எல்லையில்லா உந்தன் அன்பால்எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி
இயேசு மன்னவா உமக்கு நன்றி
1.கள்ளமில்லா உந்தன் அன்பினால்
எனக்குள்ளதெல்லாம் மறந்தேன்
கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில்
என்னை நடத்தின விதம் தன்னை மறவேன்
நான் மறவேன் – 4
2.தொல்லை மிகுந்த உலகில்
இல்லை ஆறுதல் எனக்கு
அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில்
என்னை அணைத்திட்ட விதம் தன்னை மறவேன்
நான் மறவேன் – 4
3.சொல்லி முடியாது நாதா
உம் அன்பு அள்ளி தீராது தேவா
உள்ள உறுதியுடன் நானும்
உம் சமூகம் சேரும்வரை துதிப்பேன்
நான் துதிப்பேன் – 3 என்றென்றும் துதிப்பேன்
Post a Comment