எங்களைக் கடந்து போகாதீங்க (Engalai kadanthu pogathinga
எங்களைக் கடந்து போகதீங்கதகப்பனே நீங்க கடந்து போனா
கலங்கிப் போவோம் தகப்பனை
உங்க கிருபை தான்
எங்களை தாங்கனும் - 2
உங்க சமூகம் தான்
எங்களை வழிநடத்தனும் - 2
1.பகலில் மேகஸ்தம்பம்
இரவில் அக்கினி ஸ்தம்பம்
இஸ்ரவேல் ஜனங்களை
நடத்தினதல்லவோ
எங்களையும் நடத்திடும்
எங்கள் அன்பு தெய்வமே
இப்போது வழிநடத்த
வாரும் என் ராஜனே
2.நண்பர் என்னை மறந்திடலாம்
நம்பினோரும் என்னை கைவிடலாம்
பெற்றோரும் வெறுத்திடலாம்
உற்றாரும் என்னை துரத்திடலாம்
நம்பிக்கையின் நங்கூரமே
ஆபத்தில் என் கேடகமே
அரணான கோட்டையும் நீர்
காத்திடும் என் துருகமும் நீர்
3.எத்தனையோ நிந்தனைகள்
தாங்கொண்ணா அவமொழிகள்
பக்தன் எந்தன் பாதையை
பதற வைத்த படுகுழிகள்
அத்தனையும் தாங்கிடுவேன்
அப்பா நீர் என்னோடிருந்தால்
தேற்றவாளானே
தேற்றிட வாருமையா
Post a Comment