என்றென்றும் வாழ்பவர் (Endrendrum vaazhbavar
என்றென்றும் வாழ்பவர்
என்னோடு இருப்பவர்
என்னை வழிநடத்துவாரே
என்னை தாங்கிச் செல்வாரே
1.தாயின் வயிற்றில்
என்னைத் தாங்கிக்கொண்டவர்
எனக்கு தாயும் தந்தையுமானவரே - 2
மலைகள் நிலை பெயரலாம்
குன்றுகள் அசைந்து போகலாம் - 2
ஆனாலும் அவரன்பு மாறாதே - என்றென்றும்
2.முடிவில்லாத அன்பை
என்மேல் வைத்தவர்
எனக்கு முடிவில்லா வாழ்வை தருவாரே
முதுமை எனக்கு வந்திடலாம்
தலை நரைத்து போகலாம் - 2
ஆனாலும் என்னை அவர்
தூக்கி சுமப்பார் - என்றென்றும்
3.அலைந்து திரிந்த என்னையும்
தேடி மீட்டவர்
எனக்கு ஆயனும் மீட்பரும் ஆனாரே
துன்பம் என்னைத் தொடரலாம்
சோதனைகள் தாக்கலாம் - 2
ஆனாலும் இயேசுவைத் தான்
பின் தொடர்வேன் - என்றென்றும்
4.வாழ்க்கை கடலில் என் படகை
இயேசு ஓட்டுகிறார்
எனக்கு வழியும் உண்மையும் அவர் தானே
கடலில் புயல் வீசலாம்
அலைகள் சூழ்ந்து எழும்பலாம்
ஆனாலும் என்னை இயேசு விடுவிப்பார்
This song YouTube link pls.
ReplyDelete