Engumullor yaarum sernthu

எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து (Engumullor yaarum sernthu


எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து
ஸ்தோத்தரிப்போமே
இஸ்ரவேலின் கர்த்தருக்கு
துதி செலுத்துமே
யாக்கோபின் சந்ததியாரும்
கூடி வாருமே
இயேசு எங்கள் கர்த்தர் என்று
ஸ்தோத்தரிப்போமே
 
1.தேவ மைந்தன் இயேசுவுக்காய்
ஸ்தோத்தரிப்போமே
பரிசுத்தாகமம் ஈந்ததற்காய்
ஸ்தோத்தரிப்போமே
கடந்தகால வீரருக்காய்
ஸ்தோத்தரிப்போமே
ஜீவன் விட்ட சுத்தருக்காய்
ஸ்தோத்தரிப்போமே
கோதுமை மணி தனித்தால்
இலாபம் ஏது உண்டு பாரீர்
செத்ததாகில் பலன் மிகுதி 
ஸ்தோத்தரிப்போமே
 
2.நம்பிக்கை இழக்கா வண்ணம்
முன் நடப்போமே
இராஜாவின் கட்டளைக்கு
கனம் கொடுப்போமே
தேவசமுகப் பழக்கம் உள்ளோர்
கொள்ளமாட்டார்
கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர்
தடுமாற்றம் கொள்ளார்
அவர்க்காய் இழந்தவர்க்குப்
பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
நித்திய மகிழ்ச்சி அவரைமூடும் 
ஸ்தோத்தரிப்போமே
 
3.அத்திமரம் துளிர்விடாமல்
போனபோதிலும்
திராட்சைச் செடியில் கனி
காணாமல் கருகிப்போயினும்
ஒலிவமரத்தின் பலன்கள்கூட
அற்றுப் போயினும்
வயலில் மகசூல் இன்றி
ஏக்கம் வந்த போதிலும்
இம்மைக்காக அல்ல
இயேசுநாதர் மேலே உள்ள பற்று
நம் இருப்பு பரலோகத்தில்
ஸ்தோத்தரிப்போம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes