துதிப்பேன் துதிப்பேன் தேவனை (Thuthipen thuthipen
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியில் வசிப்போனை
அதிசயமானவனை
அதிலுமேலானவனை - 2
1.இரண்டு மூன்று பேர்கள்
என் நாமத்தில்
கூடினால் வருவேன் என்றீரே
என்றுரைத்த வாக்கை நிறைவேற்ற
எங்களில் வந்தவா ஆனந்தம்
2.நின் சிலுவையில் சிந்தின
வன்மையுள்ள இரத்தத்தினால்
எண்ணுக்கடங்கா என் பாவ தோஷம்
அண்ணலே மாற்றினீர் ஆனந்தம்
3.கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட்ட
மாறாத இயேசுவுக்கே ஆனந்தம்
4.கொடூரமான கூட்டங்களின்
கொடிய சீறல் மோதியடித்து
வெள்ளம் போல் புரண்டு வந்தாலும்
வெட்டந்தரையான தானந்தம்
5.வெள்ளத்திலும் தப்பும் அடைக்கலமே
வெய்யிலுக் கொடுக்கும் நிழலே
காரிருள் பாதையில் வெளிச்சமே
கால்களின் தீபமே ஆனந்தம்
Post a Comment