உம்மை ஆராதிக்கக் கூடி வந்தோம் (Ummai aarathikka koodi vanthom
உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு
ஆராதனை (6) உமக்குத்தானே
1. நீர் செய்த நன்மைகள் [ஏராளம்] - 2
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் [தாராளம்] - 2
உமக்கே ஆராதனை
உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்
2. நீர் தந்த இரட்சிப்பு [பெரிதல்லோ] -2
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் [அதிசயம்]
உமக்கே ஆராதனை
மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே
3. நீர் தரும் இன்பமெல்லாம் [நிரந்தரம்]- 2
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் [வல்லமை] - 2
உமக்கே ஆராதனை
உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே
Post a Comment