Maalaiyil thuthippom

மாலையில் துதிப்போம் (Maalaiyil thuthippom

மாலையில் துதிப்போம்
மகிழ்வுடனே
மனக்களிப்புடனே
மாண் புகழ் இயேசுவை வானவரோடே

1.காலை மாலை உறங்காரே - நம்
காவலனுமாயிருப்பாரே
ஆவலுடன் துதி சாற்றிடுவாரே - மாலை

2.கிருபையின் வாக்கு தந்தாரே - அதை
அருமையாய் நிறைவேற்றினாரே
உரிமையுடன் புகழ்சாற்றிடுவாரே - மாலை

3.சோதனை வந்திட்ட நேரம் - அவர்
போதனை செய்தார் அந்நேரம்
சாதனையாகவே நிற்க செய்தாரே

4 அழைத்த மெய் அழைப்பிலே தானே
நாம் உழைத்திட பெலன் தந்த தேனே
பிழைத்திட ஜீவன்
கிறிஸ்துவில் தானே

5.ஆணி துளைத்திட தானே தன்னை
தியாகமாய் கொடுத்திட்ட தேனே
ஏகமாய் ஏசுவின்
நாமத்தைத் தானே

6.ஆயிரம் நாவிருந்தாலும் அவர்
அன்பை துதிக்கப் போதாது
பதினாயிரம் பேரில்
சிறந்தவரை நாம்

7.உன்னதருக்கு மகிமை
இந்த பூமியிலே சமாதானம்
மனுஷரில் பிரியம்
உண்டாகச் செய்தாரே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes