Enna vanthaalum ethu vanthaalum

என்ன வந்தாலும் எது வந்தாலும் (Enna vanthaalum ethu vanthaalum


என்ன வந்தாலும் எது வந்தாலும்
என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உம்மை ஸ்தோத்தரிப்பேன்
ராப்பகல் எந்த நேரமும்
உம்மை ஸ்தோத்தரிப்பேன் -இதயம்
முழுவதும் தந்து ஸ்தோத்தரிப்பேன்

1.யார் நேசித்தாலும் யார் வெறுத்தாலும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
யார் பேசினாலும் யார் தூஷித்தாலும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
கர்த்தரில் மகிழ்ந்து நானும்
பாடி ஸ்தோத்தரிப்பேன்
கண்களில் ஆனந்த கண்ணீர்
பொங்க ஸ்தோத்தரிப்பேன்
மனதை பறிகொடுத்தே
உம்மை ஸ்தோத்தரிப்பேன்

2.சுகமேயாயினும் இல்லாமல் போயினும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
வாழ்ந்திருந்தாலும் வீழ்ந்து போனாலும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
மேய்ப்பரின் அன்புமுகம் நோக்கி
தினமும் ஸ்தோத்தரிப்பேன்
மெய்யான விசுவாசத்தோடு
உம்மை ஸ்தோத்தரிப்பேன்
நீரே போதும் போதும்
என்று ஸ்தோத்தரிப்பேன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes