Entha kaalaththilum entha neraththilum

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் {Entha kaalaththilum entha neraththilum

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் 
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான்  [துதிப்பேன்]  2
எந்த வேளையிலும் துதிப்பேன்

1.ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே

2.தாய் தந்தை நீரே - தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே

3.வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே

4.வானிலும் நீரே - பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே

5.துன்ப நேரத்தில் இன்பமும்  நீரே
இன்னல் வேளையில் - மாறாதவர் நீரே

6.தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஜராஜனாம் - என் சர்வமும் நீரே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes