Um naamam paadanume raja

உம் நாமம் பாடனுமே ராஜா {Um naamam paadanume raja

உம் நாமம் பாடணுமே ராஜா
உம்மையே துதிக்கணுமே 
உம்மைப் போல் மாறணுமே

1.ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம் 
ஓடி வர வேணுமே
உமது வசனம் தியானம் செய்து
உமக்காய் வாழணுமே

2.இரவும் பகலும் ஆவியிலே நான்
நிரம்பி ஜெயிக்கணுமே
ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
வாழ வைக்கணுமே

3.பேய்கள் ஓட்டி நோய்களை போக்கி
பிரசங்கம் பண்ணனுமே
சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
சீடர் ஆக்கணுமே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes