இந்த பூமியின் குடிகளே {Intha poomiyin kudikalae
இந்த பூமியின் குடிகளே
நம் கர்த்தரையே பாடுவோம்
ஆனந்த சத்ததோடே - அவர்
திருமுன் சென்றிடுவோம்
ஆராதித்து அவரை ...
மகிமைப்படுத்துவோம்
1.கர்த்தர் தேவன் என்று
அறிந்து போற்றுவோம்
அவர் சாயலாக
நம்மைப் படைத்திட்டார்
தம் ஜீவன் ஈந்து
பாவம் போக்கினார்
நம்பும் மாந்தர் யாரும்
ஜீவன் அடைத்திட்டார்
அவர் வாசலில் துதியோடும்
பிரகாரங்களில் புகழ்ச்சியோடும்
2.கர்த்தர் நல்லவர்
அவர்தம் நாமம் உயர்ந்ததே
நம்மேல் வைத்த அன்பு மா... றாதே
தேவ கிருபை என்றும்
நம்மில் நிலைக்குமே
தலைமுறைகள் தோறும்
தாங்கி நடத்துமே
விசுவாசித்து நடந்திடுவோம்
இன்று விடுதலை அடைந்திடுவோம்
Post a Comment