கர்த்தரின் கரம் வல்லமையுள்ள கரம் {Kartharin karam vallamaiyulla karam
கர்த்தரின் கரம் வல்லமையுள்ள கரம்
சுத்தரின் கரம் சுத்தமாக்கிடும் கரம்
விடுதலை பெலன் சுகம் ஈந்திடும் கரம்
விதவித நோய்களை தீர்த்திடும் கரம்
1.அற்புதம் செய்திடும் அன்பரின் கரம்
தாழ்வினில் உயர்த்திடும்
தற்பரன் கரம்
காயங்கள் ஆற்றிடும்
கர்த்தரின் கரம்
கடும்ஜூரம் போக்கிடும் வலது கரம்
2.தேவைகள் சந்திக்கும்
தேவனின் கரம்
தேடிவந்தோருக்கும்
கொடுக்கும் கரம்
நாள்தோறும் நடத்திடும்
நாதரின் கரம்
நாட்கள் போனாலும்
உயிர் தந்திடும் கரம்
3,சிறுவரையும் ஆசீர்வதிக்கும் கரம்
சிறுமைப்படுவோரை
உயர்த்தும் கரம்
அநாதையை அரவணைக்கும் கரம்
அடிமைகள் தேடும் எஜமானனின் கரம்
Post a Comment