கர்த்தாவின் ஜனமே {Karthaavin janame
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு
அல்லேலூயா அல்லேலூயா
1.பாவத்தின் சுமையகற்றி கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மை கரம் நீட்டி காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா
2.நீதியின் பாதையிலே அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புதுவாழ்வைத் தருகின்றாரே
3.மறுமையின் வாழ்வினிலே இயேசு
மன்னவன் பாதத்திலே
பசி தாகம் இன்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா
Post a Comment