Potri paadi thuthippom

போற்றிப் பாடி துதிப்போம் {Potri paadi thuthippom

போற்றிப் பாடி துதிப்போம்
இயேசு நாமம் துதிப்போம்
சர்வலோக நாதா உமக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்

தேவனே வாரும் ஆவியே வாரும்
ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலூயா

1.இயேசு நமது கர்த்தர் என்று
எண்ணும் வேளையில்
உள்ளமே பொங்குதே பொங்கி பாடுதே
ஆராதிக்கும் வேளை
ஆர்ப்பரிக்கும் வேளை வானமே பூமியே
கர்த்தரை கொண்டாடிடு

2.கர்த்தர் செய்த நன்மைகளை
எண்ணிப் பாடிடுவோம்
மகிமையின் தேவனை
போற்றிப் பாடிடுவோம்
தூதர் வாழ்த்தும் தேவன்
தூயர் போற்றும் தேவன்
மாசில்லா இயேசுவை
வாழ்த்தி என்றும் வணங்குவோம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes