Kartharai naan ekkalathilume

கர்த்தரை நான் எக்காலத்திலுமே (Kartharai naan ekkalathilume


கர்த்தரை நான் எக்காலத்திலுமே
கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் - 2
அவர் கண்ணின் மணிபோல் காத்ததினாலே
கருத்துடனே துதிப்பேன்

1.ஆண்டவருக்குள் என் ஆத்மா மகிழும்
ஆதலால் கலக்கமில்லை - 2
அவர் ஆபத்துக் காலத்தில் விடுவித்துக்
காத்து ஆயுளை நீட்டுகிறார்
என்னோடு கூட கர்த்தர் மகிமையை
எல்லோரும் உயர்த்திடுங்கள்
அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கினார்
என் விண்ணப்பம் கேட்டார் - கர்த்தரை

2.இவ்வேளை கூப்பிட்டால்
கர்த்தர் அதற்கு இரக்கமாய் செவிசாய்ப்பார்
அவர் இடுக்கண்களுக்கெல்லாம்
நீங்கலாக்குவார்
இரட்சிப்பை அருளிச் செய்வார்
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாய் இருக்கும்
ஆனால் சிறப்பாய் கர்த்தரை தேடுபவருக்கோ
சிறு நன்மையும் குறையாதே - கர்த்தரை

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes