உம் புகழ் பாடாமல் (Um pugal paadamal
உம் புகழ் பாடாமல் இருக்கவே முடியாது
உம் நாமம் சொல்லாமல்
இருக்கவே முடியாது
இயேசுவே ஸ்தோத்திரம்
துதிக்கிறோம் உம்மையே
1.குயிலுக்குக் குரல் கொடுத்த
உம் இனிமையை என்ன சொல்லுவேன் ?
மலருக்கு மணம் கொடுத்த
உம் மகிமையை என்ன
சொல்லிப் பாடிடுவேன்
2.நிலவுக்கு ஒளி கொடுத்த
இந்த அதிசயம் என்ன சொல்லுவேன்
மேகத்தில் மழை கொடுத்த
இந்த படைப்பை என்ன
சொல்லிப் பாடிடுவேன்
3.பூக்களுக்கு வண்ணம் கொடுத்த
உம் அழகை என்ன சொல்லுவன்
எனக்காய் ஜீவன் தந்த
உன் அன்பை சொல்லி
சொல்லிப் பாடிடுவேன்
Post a Comment