Kerubeen serabeenkal

கேரூபீன் சேராபீன்கள் {Kerubeen serabeenkal


கேரூபின் சேராபின்கள்
ஓய்வின்றி உம்மைப் போற்றுதே
பூலோக திருச்சபை எல்லாம்
ஓய்வின்றி உம்மை போற்றிட

நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எங்கள் பரலோக ராஜாவே 
இந்த வானம் பூமியுள்ளோர் யாவும்
உந்தன் நாமம் உயர்த்தட்டுமே  -கேரூ

1. பூமியனைத்திலும் உந்தன் மகிமை
நிறைந்து வழிகின்றதே
ஆலயத்திலும் உந்தன் மகிமை
அலையலையாய் அசைகின்றதே
துதி கன மகிமைக்குப் பாத்திரர்
எல்லாப் புகழும் உமக்குத்தானே  -  2 நீர் பரிசுத்தர்

2. வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நாங்கள் உங்கள் தேவ ஆலயம்
நீர் தாங்கும் தூயஸ்தலம்
சகலமும் படைத்த என் தேவா
நீர் நித்திய சிருஷ்டிகரே    -  2 நீர் பரிசுத்தர்

3. பரலோகத்தில் உம்மை அல்லா
யாருண்டு தேவனே
பூலோகத்தில் உம்மைத் தவிர
வேறொரு விருப்பம் இல்லை
என்றும் உம்மோடு வாழ
எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர்   -  2 நீர் பரிசுத்தர்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes