Nandri endru sollukirom naatha

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா {Nandri endru sollukirom naatha


நன்றி சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)

1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்திரே நன்றி ராஜா

2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரைய்யா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரைய்யா

4. அடைக்கலமே கேடயமே நன்றியப்பா
அன்பே என் ஆறுதலே நன்றியப்பா

5. தனிமையிலே துணை நின்றீர் நன்றியப்பா
தாயைப் போல் தேற்றினீர் நன்றியப்பா

6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே

7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes